tamilnewsline

கிரிக்கட் – இலங்கை அணி புதிய பயிற்றுவிப்பாளர் தொடர்பாக வெளியான தகவல்

இலங்கை கிரிக்கட் அணியின் முழுநேர பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் அண்மையில் பதவி விலகினார்.

இதனை அடுத்து தற்போது ருமேஸ் ரத்நாயக்க இடைக்கால பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகிறார்.

அண்மையில் அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகிய ஜஸ்டின் லாங்கரை இலங்கைக்கான பயிற்றுவிப்பாளராக இணைத்துக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

முன்னாள் வீரரும், சிறிலங்கா கிரிக்கட்டின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினருமான அரவிந்த டி சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஜஸ்டின் லாங்கர் இங்கிலாந்து அணிக்கான பயிற்றுவிப்பாளராக செயற்படுவது குறித்து அவதானம் செலுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version