காலியில் இன்னுமொரு ‘போர்ட் சிட்டி’

4 years ago
Sri Lanka
(61 views)
aivarree.com

காலி துறைமுகத்தை விஸ்த்தரிக்கும் வகையில், கொழும்பு துறைமுக நகரை ஒத்த காலி துறைமுக நகரம் ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 


கடலில் மணலை நிரப்பி சுமார் 40 ஹெக்டேயர் நிலப்பரப்பை உருவாக்கி இந்த துறைமுக நகர் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 


துறைமுக விவகார அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவின் தகவல்படி, இந்த நகரில் நட்சத்திர விடுதிகள், சிறப்பங்காடிகள் உள்ளிட்ட பல கட்டிட அம்சங்கள் வரவுள்ளன.