காதலை நிராகரித்த தமிழ் மாணவி படுகொலை | சந்தேக நபர் கைது

4 years ago
Sri Lanka
(110 views)
aivarree.com

பதுளை – ஹாலி-எலயில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

உடுவரை மேல் பிரிவு, 7ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவரே கோடரியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்ததன் பின்னர் சந்தேகநபர் தலைமறைவாகி இருந்த நிலையில் அவரை காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

33 வயதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தமது காதலை நிராகரித்ததன் காரணமாகவே குறித்த மாணவி கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் புதன்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.