tamilnewsline

காணாமற்போனோர் அலுவலக செயற்பாடுகள் குறித்து அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம்

2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் காணாமற்போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகமானது மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் பிராந்திய அலுவலகங்களை நிறுவியுள்ளதுடன், 14,988 காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது.

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு அறிக்கைகள் வழங்குதல் உள்ளிட்ட மேலதிக வேலைகள் சட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணையின் பின்னர் காணாமல் போனோர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்தகைய முறைப்பாடுகளை ஆராய்ந்து முடிப்பதற்கும் வேலைத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கும் 25 விசாரணைக் குழுக்களை நியமிப்பதற்கு நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

ஏனைய அமைச்சரவை தீர்மானங்களின் முழுமையான அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.

Exit mobile version