நாட்டிலுள்ள கருங்கல் வேலைத் தளங்களுக்கு (கற்குவாரிகள்) கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான வெடிபொருட்கள் காணாமல் போய் வருகின்றன.
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில், குவாரிகளுக்கு கொண்டு வரப்படும் வெடிபொருட்கள் காணாமல் போவது அல்லது தவறான இடத்தில் வைப்பது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் என்று சுட்டிக்காட்டப்படுள்ளது.
எனவே, இது தொடர்பாக சிறப்பு கண்காணிப்பு பணியை தொடங்க அரசுக்கு அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.
கொண்டுவரப்பட்ட வெடிபொருட்கள் ஒருசில இடங்களிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன.
காணாமல் போன வெடிமருந்துகளில், அம்மோனியம் நைட்ரேட் மற்றும் வாட்டர் ஜெல் போன்றன அடங்குகின்றன.
#லங்காதீப
