கப்ராலை பதவி விலக பணிக்கவில்லை – ஜனாதிபதி

4 years ago
Sri Lanka
(102 views)
aivarree.com

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலை பதவி விலகுமாறு கூறப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அஜித் நிவாட் கப்ரால் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகவும், பல செயற்பாடுகளில் அவருக்கு ஆதரவளிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடு எதிர்நோக்கும் பாரிய பொருளாதார சவால்களுக்கு பதிலளிக்கும் பலம் தமக்கு இருப்பதாகவும், இவ்வாறான பொய்களை கண்டு மனம் தளராமல், நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்காக தனது அனைத்து முக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

Reported by
Editorial Reporter