கச்சதீவு திருவிழாவில் யாருக்கும் அனுமதியில்லை

4 years ago
Sri Lanka
(54 views)
aivarree.com

கச்சதீவு திருவிழாவில் தமிழக யாத்திரிகர்களை அனுமதிக்காதிருக்கவும், இலங்கையில் இருந்து 500 யாத்திரிகர்களை மட்டும் அனுமதிக்கவும் முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் தமிழக மீனவர்களையும் அனுமதிக்குமாறு தமிழக முதலமைச்சர் எம். கே. ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கச்சதீவு திருவிழாவில் இலங்கை மற்றும் இந்திய யாத்திரிகர்கள் யாருக்கும் அனுமதியில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா அய்வரி செய்திகளுக்கு உறுதிப்படுத்தினார்.

பாதிரியார்கள் மாத்திரம் சென்று திருவிழா பூஜையை நடத்தி வருவார்கள்.

மார்ச் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கச்சதீவு திருவிழா இடம்பெறவுள்ளது.