கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கலந்து கொள்ள தமிழக மீனவர்களுக்கு அனுமதி பெற்றுத் தருமாறு கோரப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் எம்.கே ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்
இம்முறை கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்ள தமிழக மீனவர்களுக்கு அனுமதி இல்லை என இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்களுக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கும் இடையில் உணர்வுபூர்வமான தொடர்பு இருக்கிறது
எனவே இலங்கை அரசாங்கத்துடன் கதைத்து அவர்கள் இம்முறை திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி பெற்று தருமாறு எம். கே ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
