Aivarree

ஒமிக்ரொன் இலங்கையை பெரிதாக தாக்கவில்லை/ சுகாதாரத்துறை

உலக நாடுகள் பலவற்றில் ஒமிக்ரொன் திரிபானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சில நாடுகளில் நாளாந்தம் 100,000 அளவில் கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.

இலங்கையை பொருத்தவரையில் ஒமிக்ரொன் திரிபின் மிதமான தாக்கத்தையே காண முடிவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

ஒமிக்ரொன் இலங்கையில் பெருமளவில் பரவி இருந்தாலும், அதனால் பீடிக்கப்படுகின்றவர்களுக்கு பாரதூரமான பாதிப்புகள் ஏற்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

Exit mobile version