ஐபிஎல் (IPL) – 23 இலங்கை வீரர்கள் ஏலத்தில்

5 years ago
tamilnewsline.com

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் (IPL) 20க்கு20 தொடருக்கான ஏலத்துக்காக 23 இலங்கை வீரர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் அனுப்பப்பட்டது.

அவர்களில் வனிந்து ஹசரங்கவுக்கு அதிகப்படியாக 100 இலட்சம் ரூபாய் ஏலப் பெறுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் அணிகளுக்கான வீரர்களை ஏலம் விடும் நடவடிக்கை இந்த மாதம் 12ம் 13ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

கர்நாடகாவின் பெங்குளுருவில் இந்த நிகழ்வு இடம்பெறும் என்று இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.