Aivarree

ஏப்ரல்21 தாக்குதல்/ ஹேமசிறி விடுதலை

ஏப்ரல்21 தாக்குதல் வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் கொழும்பு மேல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது.

தாக்குதல் இடம்பெற்றக் காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராக இருந்த அவர், தாக்குதலைத் தடுக்க போதிய நடவடிக்கை எடுத்திருக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றின் 3 நீதிபதிகள் அடங்கிய ஆயத்தினால் அழைக்கப்பட்டது.

இதன்போது அவரை சகல குற்றச்சாடுகளிலும் இருந்து விடுப்பதாக அறிவிக்கப்பட்டது.

Exit mobile version