Aivarree

ஏப்ரல்21 தாக்குதல்/ பூஜித் ஜெயசுந்தரவும் விடுவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் வழக்கிலிருந்து முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தினால் அவர் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.

ஏப்ரல் 21ஆம் திகதி 2019ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை, தடுக்க தவறி விட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

ஏற்கனவே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version