tamilnewsline

ஏப்ரல்21 தாக்குதல்/ பிரதான விசாரணை அதிகாரி நாட்டிலிருந்து வெளியேற்றம்?

“ஏப்ரல் 21 தாக்குதல் சம்பந்தமான விசாரணைக்கு தலைமை வகித்த உயரதிகாரி ஒருவர் நாட்டிலிருந்து தப்பி சென்றுள்ளார்” என சிறிலங்கா கார்டியன் என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்புகளை நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவரது மனைவியான புலஸ்த்தினி மகேந்திரன் என்ற சாராஹ் ஜெஸ்மின், படகுமூலம் நாட்டில் இருந்து தப்பிச் சென்றார் என்ற தகவலை இந்த அதிகாரியே வழங்கி இருந்தார்.

குறித்தப்பெண் தப்பிச் சென்றதை தம்மால் நிறுத்தப்பட்ட உளவாளிகள் இருவர் கண்ணுற்றதாகவும் அவர் சாட்சி வழங்கி இருந்தார்.

எனினும் இதன் உண்மைத் தன்மை தொடர்பான பிரச்சினை எழுந்துள்ள நிலையில் அவர் தப்பிச் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான உத்தியோகப்பூர்வ விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.

Exit mobile version