Aivarree

எரிபொருள் விலை இன்று கூடுமா?

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக திங்கள் மாலை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கான கோரிக்கையை நிதி அமைச்சிடம் வலுசக்தி அமைச்சு முன்வைத்துள்ளது.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் எரிபொருள் இறக்குமதிக்கு அறவிடப்படும் வரியை இரத்து செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தவிடயங்கள் தொடர்பாக திங்கள் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

எவ்வாறாயினும் இந்த வாரம் எரிபொருள் விலை அதிகரிப்பு ஒன்று இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version