இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் ஏரிபொருட்களின் விலை அதிகரிக்காது என, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில உறுதி அளித்துள்ளார்.
இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் தமது எரிபொருள் விலையை சனிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரித்து இருக்கிறது.
அதற்கு நிகராக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த நாட்களில் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கத்தினர் இந்த விடயத்தை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.
எனினும் இப்போதைக்கு எரிபொருள் விலையை கூட்டுவதற்கான தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்த அமைச்சர் இது சம்பந்தமாக கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தலையும் சுட்டிக்காட்டினார்.
