Aivarree

எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம் / அமைச்சர் டளஸ் கூறிய கருத்து.

சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றத்துக்கு அமைவாகக் கடந்த திங்கட் கிழமை லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனம் தமது எரிபொருள் விலைகளை அதிகரித்திருந்தது.

அதற்கு நிகராக எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரிக்காவிட்டால், டீசலுக்கு ரூபா 48.30 படியும், பெற்றலுக்கு ருபா 15.68 படியும் லீற்றர் ஒன்றுக்கு நட்டத்தை எதிர்நோக்க நேரும் எனக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சர்வதேச விலை மற்றும் லங்கா ஐ.ஓ.சியின் அதிகரிப்பு என்பவற்றைக் கருத்திற் கொண்டு எரிபொருள் விலையை அதிகரிக்க நேரும் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எனினும் விலை அதிகரிப்பு தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை விலையை அதிகரிக்க இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்திருந்தாலும், இறைவரி திணைக்களம் இன்னும் அனுமதிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version