எரிபொருள் விநியோகம் | மேலும் சிக்கல்? | சப்புகஸ்கந்த மூடல்

4 years ago
Sri Lanka
(128 views)
aivarree.com

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஞாயிற்றுக் கிழமை (20) இரவுடன் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மசகெண்ணெய் இன்மையால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை எண்ணெய் கூட்டுத்தாபனம்  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


ஏற்கனவே மசகெண்ணெய் இல்லாததால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் பல வாரங்களாக நிறுத்தப்பட்டு, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.


எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையால் எரிபொருள் விநியோகத்துக்கு பாரியைத் தாக்கம் ஏற்படாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாட்டுக்குத் தேவையான பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் நேரடியாக வெளிநாடுகளிலிருந்தே தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றன.