tamilnewsline

எரிபொருள் கிடைக்கப்பெற்றாலும் இல்லாவிட்டாலும் மின்வெட்டு தொடரும்

அடுத்த வாரத்துடன் மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதியும் அமைச்சர்களும் தெரிவித்து வருகின்றனர்.

மின்சார உற்பத்திக்கு போதுமான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால், அவ்வாறு எரிபொருள் கிடைக்கப்பெற்றாலும் மின்வெட்டு நடவடிக்கையை தொடர வேண்டிய நிலையில் இருப்பதாக இலங்கை மின்சார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதிய எரிபொருள் இல்லாத காலப்பகுதியில் அதிகபடியான நீரை விரயம் செய்து மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது.

இனி அந்த நிலைமையை முகாமை செய்வதற்கு, மின்வெட்டு தொடர்ந்து அமுலாக்கப்பட வேண்டும் என மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சண்டேடைம்ஸ்

Exit mobile version