tamilnewsline

எரிபொருள் கப்பல்கள் வருகின்றன – விடுவிக்க டொலர் தட்டுப்பாடு?

இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல்கள் சனிக்கிழமை (19) இலங்கைக்கு வரவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


இரண்டு கப்பல்களிலும் உள்ள டீசல் மற்றும் பெற்றோலை  விடுவிக்க சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்று அவர் கூறினார்.


இதேவேளை நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வெள்ளிக்கிழமை (18) எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை.


சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் எரிபொருளைப் பதுக்கி வைத்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

Exit mobile version