Aivarree

எரிபொருளுடன் 70 அடி பள்ளத்தில் விழுந்த பார்வூர்தி

எரிபொருள் ஏற்றிச்சென்ற பார்வூர்தி ஒன்று 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அக்கரபத்தனை – டயகம பிரதான வீதியில் ஆக்ரோவா பகுதியில் புதன்கிழமை (16) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டயகம வெஸ்ட் தோட்டத்திற்கு சொந்தமான இந்த பாரவூர்தி, கொட்டகலையில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு சென்ற நிலையிலேயே விபத்து ஏற்பட்டது.

டீசல் கேன்களில் (கொள்கலன்) இருந்தமையால் அவை வீணாகவில்லை என தெரியவருகிறது.

Exit mobile version