Aivarree

எரிபொருளுக்கான தட்டுப்பாடு குறையுமாம் | வலுசக்தி அமைச்சு

எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்கான தட்டுப்பாட்டை குறைக்க முடியும் என வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார்.

37,500 மெற்றிக் டன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்று செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது.

மேலும் 20,000 மெற்றிக் டன் டீசல் மற்றும் ஜெட் ஒய்ல் அடங்கிய கப்பல் ஒன்றும் நாட்டை வந்தடைந்துள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல்களில் உள்ள எரிபொருளை தரையிறக்குவதற்கான நாணய கடிதங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் ஜெட் ஒய்ல் 30,000 மெற்றிக் டன் அடங்கிய கப்பல் ஒன்றும் எதிர்வரும் தினங்களில் நாட்டை வந்தடையவுள்ளது.

Exit mobile version