Aivarree

எண்ணெய் இறக்குமதி செய்வது சவால்/ ஒப்புகொண்டார் அமைச்சர்

தற்போது நாடு இருக்கின்ற நிலையில், உலக நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது சவாலான விடயம் என்று விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில ஒப்புகொண்டார்.

பாராளுமன்றில் ஐக்கிய தேசியகட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் கூறினார்.

வலுசக்தி அமைச்சர் என்ற வகையில் வெளிநாட்டில் இருந்து எண்ணெய் கப்பல் ஒன்றை நாட்டின் கடற்பரப்பு வரையில் கொண்டுவர முடியும். 

ஆனால் அதில் இருந்து எண்ணெய்யை இறக்கி களஞ்சியப்படுத்துவதற்கான டொலர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி, எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகளின் தூதுவர்களை சந்தித்து, எண்ணெய் இறக்குமதிக்கான நீண்டகால கடன் வசதியை பெற்றுக் கொள்வது குறித்து கலந்துரையாடப்படவுள்ளது, என்றார்

Exit mobile version