Aivarree

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்த வலியுறுத்தும் பசில்

File_Photo

விரைவாக தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்தில் வலுத்துள்ளது.


இது தொடர்பாக நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக சிரேஷ்ட்ட அமைச்சர் ஒருவர் அய்வரி செய்திகளுக்குத் தெரிவித்தார்.

பாராளுமன்ற அல்லது மாகாண சபைத் தேர்தலை இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும் முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.


‘வேர்மட்டத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சக்திமயப்படுத்துவதற்கு, உள்ளூராட்சி சபை தேர்தலே சரியாக அமையும்’ என பசில் கூறுயிருப்பதாக அறியமுடிகிறது.

Exit mobile version