அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்கள் முறைகேடாக நடந்துகொண்டால், உடனடியாக அமைச்சுப் பதவியை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் அல்லது உறவினர்களால் வாகனங்கள் அல்லது அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதாக கடந்த இரண்டு வருடங்களில் 34 முறைபாடுகள் பதிவாகியுள்ளன.
இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்க வாகனங்கள் அல்லது ஏனைய சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் உறவினர்கள் 16 பேர் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற முறைகேடுகள் குறித்த விபரங்களை வழங்க, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
#லங்காதீப
