Aivarree

உடனடியாக வெளியேறுங்கள்/ஜோ பைடன் எச்சரிக்கை

உக்ரைனில் தங்கியுள்ள அனைத்து அமெரிக்க பிரஜைகளையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்யா (மாஸ்கோ) உக்ரைனை ஆக்கிரமித்தால் அமெரிக்கர்களை மீட்க படைகளை அனுப்ப முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்ய இராணுவ நடவடிக்கையின் அச்சுறுத்தல் காரணமாக அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

எல்லையில் இலட்சக்கணக்கான துருப்புக்களை குவித்துள்ள போதிலும் உக்ரைன் மீது படையெடுப்பதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை என ரஷ்யா தொடர்ந்தும் மறுத்து வருகிறது.

எவ்வாறாயினும் ரஷ்யா தமது கடற்பரப்பில் பிரவேசிப்பதை தடுப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

Exit mobile version