tamilnewsline

உங்கள் 100,000 ரூபாவுக்காக போராடவில்லை – சபையில் சாணக்கியன் இடித்துரைப்பு

பாராளுமன்றில் செவ்வாய் அன்று உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சாணக்கியன் கூறிய முக்கிய கருத்துகள்.

காணாமல் போனோரது உறவினர்களுக்கு நட்டயீடாக 100,000 வழங்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி அறிவித்திருக்கிறார்.,

ஆனால் அந்த 100,000 ரூபாவுக்காக வடக்கு கிழக்கில் காணாமல் போனோரின் உறவினர்கள் 2009ம் ஆண்டில் இருந்து போராட்டங்களை நடத்தவில்லை.

அவர்களுக்கு சரியான நீதியைப் பெற்றுத்தருவதை விடுத்து, சர்வதேசத்தை ஏமாற்ற அரசாங்கம் முயற்சிக்கக்கூடாது.

நீதியமைச்சர் அலி சப்ரி, ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நிலையில் வடக்கிற்கு விஜயம் செய்து, சர்வதேசத்தை சமாளிக்க முயற்சிக்கிறார்.

ஆனால் அதனை விடுத்து அரசாங்கம் சரியான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

Exit mobile version