உக்ரைன்/ பிந்திய 10 தகவல்கள்

5 years ago
tamilnewsline.com

உக்ரைன் – ரஷ்ய மோதல் தொடர்பாக பிந்திய 10 தகவல்கள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன.

1) உக்ரைன் ஜனாதிபதி அந்த நாட்டில் ஊரடங்கு சட்டத்தை அமுலாக்கியுள்ளார்.

2) யுத்த பிரகடணம் செய்துள்ள ரஷ்யா, கிழக்கு உக்ரைனில் எறிகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

3) கிழக்கு உக்ரைனில் உள்ள அரச படையினரை திரும்பிச் செல்லுமாறு ரஷ்ய ஜனாதிபதி கோருகிறார்.

4) ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பினை வலுப்படுத்தியுள்ளன.

5) அமெரிக்காவின் பலவீனத்தை புட்டின் காண்பித்துள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப் தெரிவித்துள்ளார்.

6) கியவ் பகுதியில் முதலாவது வெடிப்பு சம்பவம் பதிவானதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

7) “ரஷ்யாவின் வலியை கூட்டும் நடவடிக்கை” ஆரம்பமாகியுள்ளதாக அமெக்கா கூறுகிறது.

8) யுத்த பிரகடணத்தை அடுத்து எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று $100 ஐ தாண்டியது.

9) உக்ரைன் வடக்கில் இருந்து உக்ரைன் படையினர் எதிர்தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

10) பிரித்தானியாவும் அதன் ஆதரவு நாடுகளும் கூட்டாக பதிலளிக்கும் என பொரிஸ் ஜொன்சன் அறிவித்துள்ளார்.