யுக்ரைனில் நடப்பது என்ன? இறுதியாக வந்த 10 செய்திகளின் சாரம்
news_editor
யுத்தம் காரணமாக யுக்ரைனில் இருந்து 1 மில்லியன் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா வால் கணிப்பிடப்பட்டுள்ளது.
டொனெஸ்ட்க்கில் உள்ள ரஷ்ய ஆதரவு துணைபடையினர், மாரியுபோல் பகுதியில் புதிய ஷெல் வீச்சுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கியவில் தாக்குதல் நடத்தி காயமடைந்த ரஷ்ய படையினர் ஆயிரக்கணக்கானவர்கள், பலாரஸ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கியவில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவானது – கார்க்கிவில் ரஷ்யாவின் தாக்குதல்களில் பாடசாலைகள், தேவாலயங்கள் என்பனவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
ரஷ்யா, சுயாதீன செய்தி சேவைகளை கட்டுப்படுத்துவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
மெர்சேடிஸ் பென்ஸ் கார் நிறுவனம் தமது ரஷ்ய தொடர்பை துண்டித்துள்ளது – டொயோட்டா நிறுவனமும் அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. – அமசோன் நிறைவேற்று பணிப்பாளர் உக்ரைனுக்கு ஆதரவளித்துள்ளார்.
உக்ரைனின் கெர்சன் நகரை ரஷ்ய படையினர் கைப்பற்றிவிட்டனர் என்பதை உள்ளூர் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
ரஷ்ய செல்வந்தர் அலிசர் உஸ்மானொவுக்கு சொந்தமான 600 மில்லியன் டொலர் பெறுமதியான கப்பலை ஜெர்மனி கைப்பற்றியுள்ளது – இந்த செய்தியை அடுத்து 5க்கும் மேற்பட்ட ரஷ்ய செல்வந்தர்கள் தங்களது கப்பல்களை மாலைத்தீவுக்கு நகர்த்தியுள்ளனர்.
வெள்ளையர் அல்லாத வெளிநாட்டு மாணவர்கள் உக்ரைன் எல்லையில் இருந்து வெளியேறுவதில் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் – இனரீதியான இம்சைகளுக்கு அவர்கள் உள்ளாவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
39 உறுப்பு நாடுகளின் கோரிக்கை அடிப்டையில், உக்ரைனில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்காளர் தெரிவித்துள்ளார்.