உக்ரைனில் என்ன நடக்கிறது? என்று நாளாந்தம் காலையும் மாலையும் இரண்டு தடவைகள் செய்தித்துளிகள் வடிவில் இவ்வாறு செய்திகளின் தொகுப்பு பதிவிடப்படும்.
உடனடி செய்திகளுக்கு இங்கே க்ளிக் செய்து எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
- ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்ஜெய் லவ்ரோவ், உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபாவை வியாழக்கிழமை இத்தாலியில் வைத்துச் சந்திக்கவுள்ளார். – இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தைகள் அடுத்தடுத்து இடம்பெறவுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் மீண்டும் தொலைப்பேசியில் உரையாடிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விரைவாக உக்ரைன் ஜனாதிபதியுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார் – இந்திய ஊடகங்கள்
தமது நிபந்தனைகளுடன் உக்ரைன் ஒத்துப்போனால், அடுத்த நிமிடமே யுத்தம் நிறுத்தப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. – க்ரைமியாவை ரஷ்யாவாகவும், டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றை தனி நாடுகளாகவும் உக்ரைன் அங்கீகரிப்பதுடன், நேட்டோ போன்ற அமைப்புகளுடன் சேர முடியாத வண்ணம் உக்ரைன் தமது அரசியல் யாப்பைத் திருத்த வேண்டும், போன்றன ரஷ்யாவின் நிபந்தனைகளாகும்.
உக்ரைனின் மேலும் சில நகரங்களில் யுத்த தவிர்ப்பை அறிவிப்பதாக ரஷ்யா வழங்கிய முன்மொழிவை உக்ரைன் நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட யுத்த நிறுத்தம் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதே இதற்கான காரணம்.
கியவில் இருந்து மக்கள் ரஷ்யாவின் ஆதரவு நாடான பலாரஸ் செல்ல பாதுகாப்பு வலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. ஆனால் கார்க்கிவில் இருந்து மக்கள் ரஷ்யாவுக்கு மாத்திரமே செல்லமுடியும்.
தலைநகர் கியவ் உள்ளிட்ட உக்ரைனின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்தும் ரொக்கட் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து நகரங்களும் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.
இர்பின் நகரில் நடத்தப்பட்ட மோர்ட்டார் தாக்குதலில் 2 பிள்ளைகளும் தாயும் அடங்கலாக நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் – ரஷ்ய மோதல் காரணமாக 14 வருடங்களின் பின்னர் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலர்களை கடந்தது.
உக்ரைனியர்களுக்கு பிரித்தானியா வீசா விதிகளை தளர்த்தவுள்ளதாக வெளியான செய்தியை அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜொன்சன் முற்றாக நிராகரித்துள்ளார்.
ரஷ்யா இன்னும் உக்ரைனுக்கு எதிரான திட்டத்தைக் கைவிடவில்லை என்றும், அதனால் ரஷ்யாவுக்கு எதிராக இன்னும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் நாளாந்த ஊடக உரையில் உக்ரைன் ஜனாதிபதி வொலடிமிர் செலென்ஸ்கி தெரிவித்தார். – ரஷ்யாவின் எண்ணெய்யைப் புறக்கணிக்குமாறும் அவர் கோரினார்.
உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கையை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிக்கான நீதிமன்றில் இடம்பெற்றது. எனினும் அதில் ரஷ்யா கலந்து கொள்ளவில்லை.
