இந்திய கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர் இஷான் கிஷான் சனிக்கிழமை இடம்பெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்தார்.
லஹிரு குமார வீசிய பவுன்சர் பந்து அவரது தலையில் பட்டதால், அவர் காயத்துக்கு உள்ளானார்.
இதனை அடுத்து அவருக்கு MRI ஸ்கேன் செய்ய வேண்டும் என அணியின் வைத்தியர் பரிந்துரைத்திருந்தார்.
இந்த நிலையில் இஷான் கிஷான் கங்ரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்.
அவருக்கு பதிலாக, ஞாயிறு அன்று இடம்பெறும் 3ஆவது T20 போட்டியில் சஞ்சு சம்சன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
