அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலண்ட் இலங்கை வருகிறார்.
இந்த மாதம் 19-23 திகதிகளில் அவரும் அவரது தூதுக்குழுவும் பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பைப் உறுதி செய்யவும், பொருளாதாரக் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் உறவுகளை ஆழப்படுத்தவும் நுலாண்ட் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் பல்வேறு தரப்பினரை சந்திப்பார்கள்.
தூதுக்குழுவின் மற்ற மூத்த உறுப்பினர்களாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லூ மற்றும் கொள்கைக்கான துணைப் பாதுகாப்புச் செயலாளர் அமண்டா டோரி ஆகியோர் அடங்குவர்.
