tamilnewsline

இலங்கையில் மீனவர்கள் கைது / மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

PTI

தமிழக மீனவர்கள் 11 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டதுடன், மொத்தமாக இலங்கையில் 29 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


அவர்களையும் தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 79 படகுகளையும் விடுவித்துத் தருமாறு கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.


இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று நம்பி இருந்தாலும் அதற்கான சமிக்ஞை எதனையும் காணமுடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். 


மேலும் தமிழக மீனவர்களது படகுகள் இலங்கையில் ஏலத்தில் விடப்பட்டமைக்கும் அவர் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

Exit mobile version