Aivarree

இராணுவத்தை விசாரிக்க வேண்டும் / பாராளுமன்றில் சரத் பொன்சேகா

இலங்கை இராணுவத்தின் மீதுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், யுத்தகால இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தார்.


இராணுவத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் இருக்கிறது.

அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அதன் ஊடாக இராணுவத்தின் மீதுள்ள கலங்கம் போக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என்றும் சரத் பொன்சேகா கூறினார்.

மேலும், இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டிருக்கிறார்கள் என்று தமிழர்கள் நம்பினால், அவர்கள் தமக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள் என்றும் பொன்சேகா குறிப்பிட்டார்.

Exit mobile version