tamilnewsline

இராஜாங்க அமைச்சுகளுக்கான இரு புதிய செயலாளர்கள் நியமனம்/PMD

கிராமிய வயல்கள் மற்றும் அது சார்ந்த குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக கே.ஜீ.விஜேசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.டீ.பாடிகோரால நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதியசெயலாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்.

கே.ஜீ.விஜேசிறி, புத்தளம் மாவட்டச் செயலாளராகவும், எஸ்.டீ.பாடிகோரால, திருகோணமலை மாவட்டச் செயலாளராகவும் செயலாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version