இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவை தாண்டி சட்டவிரோத மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு வந்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு கிளிநொச்சி – இரணைதீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த 12 இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளனர்.
அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இலங்கையில் தற்போது 41 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
