இன்றுடன் எரிபொருள் விநியோகம் “Okay sir”/ ஜனாதிபதியிடம் அதிகாரிகள் உறுதி

4 years ago
Sri Lanka
(120 views)
aivarree.com

இம்மாதம் 5ஆம் திகதிக்கு பின்னர் மின்வெட்டு இருக்காது என அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும் வியாழக்கிழமை (03) முதல் வழமை போன்று நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

இதனால் மக்கள் பீதியில் எரிபொருள் சேகரிப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.