Aivarree

இந்திய மாணவர்களை பணய கைதிகளாக பிடித்துள்ளதா உக்ரைன் படை?

கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் படி, உக்ரைன் படையினரால் இந்திய மாணவர்கள் பலர் பணய க்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா கூறுகிறது.

இந்தியாவுக்கான ரஷ்யாவின் தூதரகம் தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவிட்டுள்ளது.

குறித்த மாணவர்களை ரஷ்யாவுக்கு செல்லவிடாமல் தடுத்து, அவர்களை மனித கேடயங்களாக உக்ரைன் படைத்தரப்பு பயன்படுத்துவதாகவும் அந்த டுவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்திய பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புட்டினும் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும், இந்திய மாணவர்களின் வெளியேற்றம் குறித்து பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version