இந்தியா இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதற்கான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
எரிபொருள் கொள்வனவுக்காக இந்த கடன் வழங்கப்படவுள்ளது.
ஆனால் அந்த தொகையில் 75% இந்திய வர்த்தகர் ஒருவரிடம் பொருட்கள், சேவைகளை பெற்றுக்கொள்ள பயன்படுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 25% கடன் தொகைக்கு இந்தியாவுக்கு வெளியில் கொள்வனவில் ஈடுபடலாம்.
