இந்தியாவில் குறைவடையும் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை

4 years ago
World
(43 views)
aivarree.com

இந்தியாவில் கடந்த ஐந்து தினங்களாக தினசரி 100,000க்கும் குறைவான கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 58,077 பேருக்கு கொவிட் உறுதியான போதும், வியாழனை விட 13 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 97.17 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் இதுவரையில் 425,836,137 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 697,802 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

657 பேர் கொவிடால் மரணித்த நிலையில் மொத்த மரணங்கள் எண்ணிக்கை 507,177 ஆக பதிவாகியுள்ளது.

Reported by
Editorial Reporter