tamilnewsline

இந்தியாவில் இருந்து இயக்கப்படும் மிகப்பெரிய போதை வர்த்தகம்

இந்தியாவில் இருந்து இலங்கையில் மிகப் பெரிய போதை வர்த்தகம் ஒன்று இயக்கப்படுகின்றமை தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்தியாவில் சந்தேகநபர்கள் சிலர் தலைமறைவாக இருந்து இலங்கையில் சிலரை போதைப்பொருள் வணிகத்துக்காக வழி நடத்துவதாக கூறப்படுகிறது.

அண்மையில் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் இது சம்பந்தமான தகவல்களை வழங்கி இருப்பதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த போதை வர்த்தகம் குறித்த மேலதிக தகவல்களைப் பெறுவதற்கான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version