tamilnewsline

இந்தியாவிலேயே விலை உயர்ந்த காரை வாங்கியுள்ள முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி இந்தியாவின் முன்னிலை கோடீஸ்வரராக இருக்கிறார்.

அவர் உலகில் மிகப் பெறுமதிவாய்ந்த கார்களில் ஒன்றாக கருதப்படும் ரோல்ஸ் ராய்ஸ் இன் புதிய வகை ஒன்றை இறக்குமதி செய்துள்ளார்.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற பெட்ரோல் வகையை சேர்ந்த இந்த காரின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 13.14 கோடிகள்.

2018ஆம் ஆண்டு இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் விலை 6.95 இந்திய கோடி ரூபாய்களை இருந்தது.

ஆனால் முகேஷ் அம்பானி தமக்கு ஏற்றாற் போல் இந்த காரினை மாற்றி அமைத்து அதன் காரணமாக அதன் விலை 13 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது.

Exit mobile version