இந்தியா இலங்கைக்கு வழங்குவதாக ஒப்புகொண்ட 1.9 பில்லியன் கடன் வசதியில் மீதமுள்ள 1 பில்லியன் டொலர்கள் பல்வேறு நிபந்தனைகளால் தாமதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த கடனை வழங்குவதற்கு முன்னர், நாடு தற்போது இருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து எவ்வாறு மீளப்போகிறது என்ற திட்டத்தை முன்வைக்குமாறு இந்தியா நிபந்தனை விதித்துள்ளது.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தியாவினால் முன்னெடுப்பதற்கு ஏற்கனவே இணங்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பது குறித்த நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக சம்பூரிலும் நெடுந்தீவிலும் இயற்கை வாயு அல்லது சூரிய சக்தி மின்மையம் அமைத்தல், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல்பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளுதல், திருகோணமலை துறைமுகத்தை மையப்படுத்திய வேலைத்திட்டங்கள் என இந்தியா பட்டியலிட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளுக்கு தலையசைக்காத வரைக்கும் 1 பில்லியன் டொலர் கடன் இலங்கைக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
சண்டே டைம்ஸ்
