இந்தியாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை

5 years ago
tamilnewsline.com

இலங்கை மின்சார சபைக்கு நேரடியாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இந்திய அரசாங்கம் மற்றும் IOC உடன் இலங்கை மின்சார சபை இரு சுற்று பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது.

மின்சார சபையின் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான ஏ.ஆர்.நவமணி இதனைக் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த பேச்சுவார்தை நிறைவடைந்தாலும் இன்னும் பதில் கிடைக்கலில்லை.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.