Aivarree

இணையத்தில் களவாடி ஏவுகணை விட்ட வடகொரியா/ ஐ.நா கண்டுபிடிப்பு

இணையத்தளம் ஊடாக தாக்குதல் நடத்தி, க்ரிப்டோகரன்சி எனப்படுகின்ற எண்மான நாணயத்தை களவாடி, ஏவுகணை திட்டத்துக்கு வடகொரியா பயன்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்றில், கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டின் நடுப்பகுதி வரையில் 50 மில்லியன் டொலர்கள் பெறுமதியான எண்மான நாணயத்தை வடகொரியாவின் சைபர் தாக்குதல்தாரிகள் களவாடியுள்ளனர்.

வட அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் மூன்று பெரும் இணையத் தாக்குதல்களை நடத்தி இந்த எண்மான சொத்துக்களை சூறையாடியுள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டில் மாத்திரம் வடகொரியா 2 பில்லியன் டொலர்களை திரட்டி ஆயுத உற்பத்திக்காக பயன்படுத்தியுள்ளது.

ஆனால் அங்குள்ள பொதுமக்கள் மிகவும் வறுமையான நிலையில் அடிமைத்தனத்துடன் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version