tamilnewsline

ஆளும் கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு

ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளனர். 


அமைச்சர்களான விமல் வீரவன்ச அல்லது உதய கம்மன்பில ஆகியோரது இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளால் தயாரிக்கப்பட்டுள்ள யோசனை திட்டம் எதிர்வரும் 2ம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.


டொலர் தட்டுப்பாடு, மின்சாரம், எரிபொருள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினம் ஆகியவற்றுக்கான தீர்வுகளாக இந்த அறிக்கையில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


இதுதொடர்பாக அவர்கள் புதன்கிழமை அமைச்சர் விமல்வீரவன்சவின் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். 

Exit mobile version