tamilnewsline

ஆத்திரத்தில் உதைத்த தந்தை / அநியாயமாக பலியான 2 வயது குழந்தை

மனைவியுடன் இடம்பெற்ற வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த தந்தை உதைத்து கீழே தள்ளியதில் 2 வயதான பெண் குழந்தை ஒன்று மரணித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்தியா – உத்தர்பிரதேசில் உள்ள ஃபைரோசாபாத் கிராமத்தில் இந்த சம்பவம் திங்களன்று நடைபெற்றுள்ளது.

சம்பவத்தில் மரணித்த ஆயட் என்ற குழந்தையை உறவினர்கள் அவசர அவசரமாக புதைக்க முற்பட்ட போது, காவல்துறையினர் விரைந்து சென்று தடுத்துள்ளனர்.

நடந்த சம்பவத்தை குழந்தையின் தாத்தா காவல்துறை வாக்குமூலத்தில் விளக்கியுள்ளார்.

“ஆயட்” இன் தந்தை கைது செய்யப்பட்டுள்ள போதும், அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

#NDTV

Exit mobile version