tamilnewsline

ஆண் குழந்தை வேண்டி தலையில் ஆணி அடித்துக் கொண்ட கர்ப்பிணி  பெண்.

NDTV

பாகிஸ்தான் – பெஷாவார் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஆண்குழந்தை கிடைக்க வேண்டும் என்பதற்காக தமது தலையில் ஆணி ஒன்றை அடித்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


அந்த பகுதியைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவரால் அந்தப் பெண்ணின் தலையில் 2 அங்குலம் நீளமான ஆணி அடிக்கப்பட்டுள்ளது – எனினும் அவர் பெண் குழந்தை ஒன்றையே கருவுற்றுள்ளார்.


பெண்ணுக்கு உயிராபத்து ஏற்படவில்லை என்றாலும் கடும் வலியோடு அவர் வைத்தியரை நாடியுள்ளார்.


ஆணி பாதுகாப்பாக மீட்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியுள்ள குறித்த பெண்ணை தேடி காவல்துறை விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.


அவர் ஊடாக அவரது தலையில் ஆணி அடித்த மந்திரவாதியைக் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக பெஷாவார் காவல்துறையினர் தெரிவித்தனர். 

Exit mobile version