ஆசிரிய உதவியாளர்கள் விவகாரம் – மலையக தலைமைகள் ஏமாற்றுகின்றனவா?

4 years ago
Sri Lanka
(110 views)
aivarree.com

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக, கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன ஊடாக அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.


இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் செந்தில் தொண்டான் போன்றவர்கள் இதனைத் தெரிவித்திருந்தனர்.


ஆனால் கடந்த இரண்டு வாரங்கள் அவ்வாறான எந்த விடயமும் அமைச்சரவையில் பேசப்படவே இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.


அடுத்தவாரம் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திலும் இதுதொடர்பான அட்டவணை எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதேநேரம், குறித்த நியமனங்கள் குறித்து பின்பு பரிசீலிக்குமாறு  மத்திய மாகாண ஆளுநருக்கும், பிரதம செயலாளருக்கும் நிதியமைச்சில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.