tamilnewsline

ஆசிரியர் மரணத்துக்கு நீதி கோரி லோகி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

தலவாக்கலை லோகி தோட்ட மக்கள் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் லோகி வழி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கடந்த (21) திகதி தலவாக்கலை – லோகி தோட்ட வழி பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது அதன் கிளையொன்று உடைந்து மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.

தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்தவரும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் பிரபல கணித ஆசிரியருமான வேலுசாமி மகேஸ்வரன் (39) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

முன் அனுமதி இன்றி குறித்த 200 வருடங்கள் பழைமையான மரத்தை வெட்டியமை மற்றும் ஆசிரியரின் மரணத்துக்கு காரணமானமை என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சம்பவத்தில் மரணித்த ஆசிரியரின் குடும்பத்தாருக்கு நட்டயீடு பெற்றுக் கொடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.

Exit mobile version