இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2ஆவது 20/20 போட்டி சனிக்கிழமை சிட்னியில் நடந்தது.
இதன்போது புலம்பெயர்ந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் மைதானத்துக்கு வெளியில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தில், அகதிகள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அனபெல் பெட்டிட்டும் கலந்துகொண்டிருந்தார்.
“இலங்கையின் இனப்படுகொலைகளை கிரிக்கட் கொண்டு மறைக்க இடமளிக்க வேண்டாம்” என அவர்கள் வலியுறுத்தினர்.
